அரசு மாவட்ட சுகாதார மையத்தில் Data Entry Operator வேலை – மாத ஊதியம்: ரூ.45,000/-

 அரசு மாவட்ட சுகாதார மையத்தில் Data Entry Operator வேலை – மாத ஊதியம்: ரூ.45,000/-

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார மையத்தில் இருந்து  அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிபபு வெளியாகியுள்ளது. அதில் Lab assistants, District Programme Coordinator, Medical Officer, மற்றும் Data Entry Operator ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார மையத்தில் Lab assistants, District Programme Coordinator, Medical Officer, மற்றும் Data Entry Operator ஆகிய பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

DEO வயது வரம்பு:

பதிவு செய்வோர் 01.12.2021 தேதியில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN DHS கல்வித்தகுதி:
  • 12ம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree/ B.Pharm, DMLT, MBA, PG Diploma, MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
TN DHS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

DEO தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 22.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Download Official Notification PDF

Post a Comment

0 Comments