தமிழக அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 8வது தேர்ச்சி..!

 

தமிழக அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – 8வது தேர்ச்சி..!

வேலூர் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Record Clerk, Assistant & Security பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Record Clerk, Assistant & Security பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

Record Clerk – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Sc முடித்திருக்க வேண்டும்.

Assistant – அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Security – அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பத்து அதிகபட்சம் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

Record Clerk – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,549/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,408 /- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Security – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,408 /- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 28-12-2021 முதல் 30-12-2021ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Regional Office,
Tamil Nadu Civil Supplies Corporation,
Palavansathu Kuppam,
Vellore-632001.

Download Notification 

tncsc-vellore-09-12

Tirupur notification

Post a Comment

0 Comments