தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 435 காலிப்பணியிடங்கள் – ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 435 காலிப்பணியிடங்கள் – ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்கழகம்‌, திருவாரூர்‌ மண்டலத்தில்‌ நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நெல்‌ கொள்முதல்‌ பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல்‌ எழுத்தர்‌, உதவுபவர்‌ மற்றும்‌ காவலர்‌ பணியிடங்களுக்கு ஆண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக காலிப்பணியிடங்கள்:
  • பட்டியல்‌ எழுத்தர்‌ – 72
  • உதவுபவர்‌ – 67
  • காவலர்‌ – 296
TNCSC வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, OC விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். BC, MBC விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். SC/STவிண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

TNCSC கல்வி தகுதி:
  1. பட்டியல்‌ எழுத்தர்‌ – பி.எஸ்.சி (இளங்கலை அறிவியல்)
  2. உதவுபவர்‌ – +2 (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. காவலர்‌ – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC திருவாரூர் ஊதியம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பட்டியல்‌ எழுத்தர்‌ பதவிக்கு ரூ.2410 – ரூ.4049/- (அகவிலைப்படி), உதவுபவர்‌ பதவிக்கு ரூ.2359 – ரூ.4049/- (அகவிலைப்படி), காவலர்‌ பதவிக்கு ரூ.2359-4ரூ.4049/- (அகவிலைப்படி) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

திருவாரூர்‌ மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும்‌ தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும்‌ விண்ணப்பதாரர்கள்‌ உரிய சான்றுகளுடன்‌ முதுநிலை மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்கழகம்‌, மன்னார்குடி சாலை, விளமல்‌ திருவாரூர்‌ என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள்‌ 05.11.2021 மாலை 5.00 மணி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌.

Download Notification 2021 Pdf
Post a Comment

0 Comments