கனரா வங்கியில் 650 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, சம்பளம் முழு விவரங்களுடன்
IBPS எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் ஆனது நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கி பணியிடங்கள் :
கனரா வங்கியில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு மொத்தமாக 650 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- General பிரிவினர் – 265 காலியிடங்கள்
- SC பிரிவினர் – 97 காலியிடங்கள்
- ST பிரிவினர் – 48 காலியிடங்கள்
- OBC பிரிவினர் – 175 காலியிடங்கள்
- EWS பிரிவினர் – 65 காலியிடங்கள்
PO வயது வரம்பு :
பதிவாளர்கள் 02.10.1991 முதல் 01.10.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராகவும், 01.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
Canara Bank PO கல்வித்தகுதி :
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் BA, BCom, BSc, B.Tech அல்லது அதற்கு இணையான Degree (Graduation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கனரா வங்கி ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.52,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Canara Bank தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் பட்டதாரிகள் கீழ்காணும் கட்ட சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
- Preliminary Examination
- Main Examination
- Document Verification
- Interview
கனரா வங்கி தேர்வு தேதி:
பதிவு செய்வோருக்கு முதற்கட்ட Preliminary தேர்வுகள் 04.12.2021 & 11.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற (Tentative) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
- SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தோர் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.10.2021 முதல் 10.11.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
0 Comments