பொதுத்துறை வங்கிகளில் 4132 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு முழு தகவல்களுடன்

 பொதுத்துறை வங்கிகளில் 4132 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு முழு தகவல்களுடன்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது வங்கி காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வங்கி காலிப்பணியிடங்கள்:

IBPS தேர்வு வாரியம் மூலமாக பல்வேறு வங்கிகளில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு 4000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Probationary Officer வயது வரம்பு :
  • விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அதாவது 02.10.1991 முதல் 01.10.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
IBPS கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Degree (Graduation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

IBPS தேர்வு செயல்முறை :
  • பதிவு செய்யும் பட்டதாரிகள் Preliminary Examination, Main Examination, Document Verification & Interview ஆகிய நான்கு கட்ட சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • Preliminary Exam ஆனது 04.12.2021 & 11.12.2021 ஆகியோரை தேதிகளில் நடைபெற (தோராயமாக) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.10.2021 முதல் 10.11.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த அவகாசத்திற்குள் விண்ணப்பக் கட்டணத்தினையும் செலுத்திட வேண்டும்.

Download IBPS PO Notification PDF


Post a Comment

0 Comments