10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை – 300 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள தபால்காரர்/அஞ்சல் காவலர் போன்ற காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளி வந்துள்ளது.
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
தபால்காரர்/அஞ்சல் காவலர் போன்ற காலிப்பணியிடங்களுக்கு 318 காலியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பில், குறிப்பிட்ட பிரிவினருக்கான வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிவினருக்கும் 01.01.2021ன்படி அதிகபட்ச வயது வரம்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், UR பிரிவினருக்கு அதிகபட்சம் 50, OBC பிரிவினருக்கு அதிகபட்சம் 53, SC/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 55 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
தபால்காரர் / அஞ்சல் காவலர் போன்ற காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சியில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 3 தாள்கள் அடங்கிய தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு 20.10.2021குள் அனுப்பி வைக்க வேண்டும்.
1 Comments
விண்ணப்பம் எங்கே பெற்று கொள்ளலாம்
ReplyDelete