விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி! - முதல்வர் அறிவிப்பு.
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அறிவித்த நிலையில், முதலமைச்சர் சட்டப்பேரவையில் இவ்வாறு அறிவித்துள்ளார்.
0 Comments