முதுமைத் தோற்றத்தைத் தவிர்க்க உதவும் இயற்கைப் பொருள்கள்!
முதுமை என்பது ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னை. முதுமை வயதில் மட்டுமல்ல, உடல் தோற்றத்தில், அழகிலும் வெளிப்படையாகத் தெரிகிறது.
அந்தவகையில் முதுமையிலும் அழகாகத் தெரிய வேண்டும் என்று பெண்கள் பலரும் விரும்புகின்றனர். முதுமையை வெளிக்காட்டும் சரும சுருக்கங்களைப் போக்க செயற்கை சிகிச்சை முறைகளைக் கூட எடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால், முதுமைத் தோற்றத்தைப் போக்க, அதாவது சருமச் சுருக்கத்தைப் போக்க இயற்கையாகவே சில பொருள்களை பயன்படுத்தி தீர்வைக் காணலாம்.
எலுமிச்சை:
- சருமம் பொலிவு பெறவும், சருமத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்கவும் சிறந்த பொருள் எலுமிச்சை. இதில், வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பதால் சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குகிறது. சருமம் சுருக்கமடைவதைத் தடுக்கிறது. எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும்.
கற்றாழை:
- சருமப் பராமரிப்புக்கு சிறந்த பொருள். கற்றாழை. கற்றாழை ஜெல்லை முகத்தில் தொடர்ந்து தடவிவர சருமத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி பொலிவு பெறும்.
- சருமத்தில் நீர்ச்சத்து அதிகமாக இருக்க வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்ளை செய்து 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர முகத்தில் கருமை நீங்கி பொலிவாக இருக்கும்.
ரோஸ் வாட்டர்:
- சருமத்தை இளமையுடன் வைத்திருக்க ரோஸ் வாட்டரை தினமும் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
பப்பாளி:
- பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் வேதிப்பொருள் சருமத்தில் இறந்த செல்களை நீக்கி அழகை பராமரிக்கிறது.
- பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து கழுவவும்.
0 Comments