மகளின் கள்ளத்தொடர்பை கண்டித்த தந்தை அடித்துக் கொலை!

மகளின் கள்ளத்தொடர்பை கண்டித்த தந்தை அடித்துக் கொலை!





தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மகள் கள்ளத்தொடர்பை கண்டித்த மீன் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொன்னையன்கொட்டாய் பிடமனேரிப் பகுதியைச் சேர்ந்த செல்வம்(45) மனைவி சிவகாமி உடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தார்.

இந்நிலையில் இவர்களது மூத்த மகள் ஜெயப்பிரியாவை, கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அடுத்த சாமண்டபட்டி திருப்பதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெயப்பிரியாவின் கணவர் திருப்பதி, செல்வத்திடம் ஜெயப்பிரியா அப்பகுதியை சேர்ந்த அரிஸ்டாட்டில் என்பவருடன் பழகி வருவதாக தெரிவித்துள்ளார் .

இதனை தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி செல்வம் தனது மூத்த மகள் ஜெயப்பிரியா வீட்டிற்கு சென்று ஜெயப்பிரியா , அரிஸ்டாட்டில் என்ற வாலிபருடன் தவறான உறவு வைத்திருப்பது கண்டித்து திட்டியுள்ளார் .




மேலும் நல்லபடியாக கணவருடன் வாழ வேண்டும் அறிவுறுத்திவிட்டு வந்துள்ளார் . இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரியா தனது ஆண் நண்பரான அரிஸ்டாட்டிலிடம் , தந்தை திட்டியதை தெரிவித்துள்ளார் .

இதனால் அத்திரமடைந்த அரிஸ்டாட்டில் , தனது நண்பர்களான காஞ்சிபுரத்தை சேர்ந்த சின்னதுரை , சதீஷ்குமார் ஆகியோரின் உதவியுடன் செல்வத்தை காரிமங்கலம் பகுதியில் வாக்கு வாதம் செய்து , கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.



இந்நிலையில் மறுநாள் செல்வம் சுயநினைவின்றி இருந்துள்ளார் . இதனை அறிந்த உறவினர்கள் அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . ஆனால் செல்வலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இதனை தொடர்ந்து காரிமங்கலம் காவல் துறையினர் அரிஸ்டாட்டில் , சின்னத்துரை , சதீஷ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து செய்தனர்.






















Post a Comment

0 Comments