சரவணா ஸ்டோரில் நகைகளை திருடிய பெண்கள்!

Follow Us

சரவணா ஸ்டோரில் நகைகளை திருடிய பெண்கள்!

சரவணா ஸ்டோரில் நாடகமாடி நகைகளை திருடிய பெண்கள்!






சென்னை பாடியில் உள்ள பிரபல சரவணா ஸ்டார் பல் பொருள் அங்காடியின் கீழ்தளத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனை பிரிவு அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் விற்பனை முடிந்து இரவு கணக்கு சரி பார்க்கும் பொழுது 12 சவரன் செயின் களவு போனது தெரியவந்தது.இதையடுத்து ஊழியர்கள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் நகையை திருடி சென்றது பதிவாகியிருந்தது.






இதுகுறித்து அக்கடையின் மேலாளர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை தேடி வருகின்றனர் .

சிறிய நகை கடைகளில் கவனத்தைத் திசை திருப்பி ஒரு சில திருட்டு நடைபெற்று வந்த நிலையில் பிரபல நகைக்கடை ஒன்றில் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









Post a Comment

0 Comments