திருமண நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை
செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நக்ஷத்ரா, 'வாணி ராணி' சீரியலில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'திருமகள்' சீரியலிலும் நடித்துள்ளார்.
Year | Name | Channel | Role | Notes |
---|---|---|---|---|
2020 | Minnale | Sun TV | Herself | Cameo appearance |
2020 | Nayagi | Sun TV | Divya | |
2020 | Thirumagal | Sun TV | Herself | Cameo appearance |
2019 | Roja | Sun TV | Bhagyalakshmi | Cameo appearance |
2018–2020 | Lakshmi Stores | Sun TV | Bhagyalakshmi | |
2017 | As I'm Suffering From Kadhal | Tanvi | Web series | |
2015–2017 | Sun Singer | Sun TV | Host | Seasons 4 & 5 |
2015–2016 | Vani Rani | Sun TV | Rudhra | |
2015 | Jodi Number One | Star Vijay | Contestant | Season 8 |
2014 | Vaanavil | Thanthi TV | Host |
சீரியல்கள் மட்டுமல்லாது மிஸ்டர் லோக்கல், இரும்புகுதிரை, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நக்ஷத்ரா
Year | Film | Role | Language | Notes |
---|---|---|---|---|
2013 | Settai | Gayathri | Tamil | |
2014 | Vaayai Moodi Pesavum | Saraswathi | Tamil | |
2014 | Irumbu Kuthirai | School girl | Tamil | |
2016 | Nambiyaar | Confused girl | Tamil | |
2017 | Indrajith | College student | Tamil | |
2019 | Mr. Local | Sowmiya | Tamil | |
2021 | Vanjagan | Tamil | Filming | |
2021 | Hey Sinamika | Tamil | Filming |
கடந்த ஜனவரி 22-ம் தேதி தனது காதலர் ராகவை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'நான் இன்ஸ்டாகிராமிற்கு வந்த போது நண்பர்கள் மட்டும் தான். ஆனால் நடிப்பு தொழில் என நான் ஈடுபட்டபோது ரசிகர்கள் நீங்கள் எல்லோரும் என் சிறிய உலகத்தில் ஒரு பகுதியாக இருந்தீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் எனக்குக் கொடுக்கும் அன்பு வளர்ந்து கொண்டே வருகிறது. அது தான் என்னுடைய பலம்.
உங்களிடம் முக்கியமான ஒரு நபரை அறிமுகப்படுத்த இருக்கிறேன்' என்று கூறி தனது காதலருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். ஜனவரி 26-ம் தேதி இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்ட போட்டோவுடன் நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்ட நக்ஷத்ரா தற்போது நிச்சயதார்த்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
Engagement video: https://www.instagram.com/nakshathra.nagesh/?hl=ta
0 Comments