வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு குட்நியூஸ்.. 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ்.. இனி நோ டென்ஷன்..!
வங்கி திவால்:
ஒரு வங்கி திவால் ஆனாலோ அல்லது வங்கியில் செய்த டெப்பாசிட் பணம் திரும்பப் பெற முடியாமல் போனால், டெபாசிட் செய்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை இன்சூரன்ஸ் ஆக உடனடியாகக் கிடைக்கும் என அறிவித்துள்ளார்.
ரூ.5 லட்சம் வரை இன்சூரன்ஸ்:
மத்திய அரசு The Deposit Insurance and Credit Guarantee Corporation Act, 1961' (DICGC சட்டம்) கீழ் செய்யப்பட்டு உள்ள புதிய மாற்றத்தின் படி வங்கியில் திவாலாகும் பட்சத்தில், வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் இன்சூரன்ஸ் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனவே மக்கள் இனி எவ்விதமான பயமும் இல்லாமல் ஒரு வங்கியில் 5 லட்சம் ரூபாய் வரையில் சேமிக்கலாம்.
யெஸ் வங்கி, பிஎம்சி வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி:
2020ல் யெஸ் வங்கி, பிஎம்சி வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி என 3 பிரபலமான வங்கி மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்து வாடிக்கையாளர்களின் கணக்கை முடக்கியது. இதனால் மக்களுக்கு இந்திய வங்கிகள் மீதுள்ள நம்பிக்கை பெரிய அளவில் குறைந்தது மறுக்க முடியாது.
மக்களின் நம்பிக்கை:
இந்தப் பிரச்சனையைச் சரி செய்யும் விதமாக DICGC சட்டத்தின் கீழ் இருக்கும் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் அளவை 5 லட்சமாக உயர்த்தி 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் இப்புதிய மாற்றத்தை நடவிருக்கும் பட்ஜெட் கூட்டத்திலேயே அமலாக்கம் செய்ய உள்ளதாகவும் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.
0 Comments