இந்தியாவில் வாட்ஸ் அப் செயலியை தடை செய்ய முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் செல்போனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் இல்லாத வீட்டையே தற்போது பார்க்க முடியாது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப் போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக்கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக வீடியோ கால் பேசுவதற்கு வாட்ஸ்அப் என்ற செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து வேறு செயலுக்கு மாற்றமடைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது என்பதை மக்கள் உணர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் தனிநபர் பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பை அடுத்து அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அதற்கு வாட்ஸ் அப்பை தடை செய்ய முடியாது,வேறு எதை அடைய வேண்டுமானால் பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
0 Comments