Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) என்பது மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டம். சமூகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு ஒரு முறையான மருத்துவ காப்பீட்டை வழங்குவதற்காக செப்டம்பர் 23, 2018 அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது
இந்த Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) திட்டம் ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான வரம்புக்கு மருத்துவ காப்பீட்டை ஒரு வருடத்துக்கு வழங்குகிறது. கூடுதலாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளை உள்ளடக்கும் ஏற்பாடுகளும் இத்திட்டத்தில் உள்ளது.
Pradhan Mantri Jan Arogya Yojana திட்டம் நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்பட்ட முதல் நாளிலிருந்தே முன்பே இருக்கும் அனைத்து நிபந்தனைகளையும் உள்ளடக்கியது. தகுதிவாய்ந்த ஒரு இந்திய குடிமகன் PM-JAY மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Ayushman Bharat Yojana திட்டத்தில் எளிதாக பதிவு செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்துக்கு போகவும். தளத்தில் உள்ள ‘Am I Eligible’ என்பதை சொடுக்கவும்.
மேலும் தொடர நீங்கள் தளத்தில் log on செய்ய வேண்டும்.
உங்கள் கைபேசி எண்ணை உள்ளீடு செய்து அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள captcha code ஐயும் உள்ளீடு செய்யவும். அடுத்து ‘Generate OTP’ என்பதை சொடுக்கவும்.
உங்கள் கைபேசியில் வரும் OTP ஐ உறுதி செய்யவும் தளத்தில் log on செய்யவும் பயன்படுத்தவும்.
அடுத்ததாக உங்களிடம் உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுக்க கூறப்படும். அடுத்து உங்கள் ரேசன் அட்டை எண், HHD number அல்லது கைபேசி எண்ணை உள்ளீடு செய்து தேடல் செய்ய கூறப்படும்.
தேடல் முடிவில் உங்கள் குடும்பம் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.
(ஒரு முறை இத்திட்டத்தில் நீங்கள் பதிவு செய்து கொண்டால், நீங்கள் PMJAY Ayushman Bharat Yojana திட்டத்தின் பயன்களை பெற வேறு எங்கும் பதிவு செய்ய தேவை இல்லை).
எதாவது ஒரு Empanelled Health Care Provider (EHCP) அணுகுவது, உங்கள் குடும்பம் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ள மற்றொரு வழி. Ayushman Bharat Yojana call center number: 14555 or 1800-111-565 ஐயும் நீங்கள் தொடர்புக் கொள்ளலாம்.
AB PM-JAY திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற நீங்கள் தகுதி பெற்றவுடன், நீங்கள் ஒரு e-card ஐ பெற முயற்சி செய்யலாம். PMJAK kiosk க்கு நேரில் செல்லுங்கள், அவர்கள் உங்கள் அடையாளத்தை உங்களது ஆதார் அட்டை அல்லது ரேசன் அட்டை மூலம் சரிப்பார்ப்பார்கள். குடும்ப அடையாளத்துக்கான ஆவணம் (PM letter அல்லது RSBY card) எதையாவது ஒன்றையும் நீங்கள் கொடுக்க வேண்டும்.
சரிப்பார்ப்பு முடிந்த பிறகு உங்களுக்கு AB PM-JAY Id யுடன் அச்சடிக்கப்பட்ட ஒரு e-card வழங்கப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி தேவைப்படும் போது இந்த அடையாள அட்டையை (ID) ஒரு ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
0 Comments