தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உள்ள பதிவு அட்டையை புதுப்பித்தல்
- ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்
- 60 வயது பூர்த்தி அடைந்தவர் புதுப்பிக்க முடியாது
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:
1. பதிவு அட்டை
2. அடையாளச் சான்றிதழ்
3. குடும்ப அட்டை
5. ஆதார் அட்டை
6. வங்கி கணக்குப்புத்தகம் முதல் பக்கம்
7. வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் ஆவணம்
வழிமுறைகள்:
- முதல் முறை இந்த இணையதளத்தில் உள் நுழைபவர்கள் தங்களது பதிவு அட்டை எண் மற்றும் கைப்பேசி எண் மூலம் உள்நுழையலாம்
- விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் தங்களுடைய கைபேசிக்கு விண்ணப்ப எண் அனுப்பபடும்.
- தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் விளக்கம் தேவைப்படின் சம்பந்தப்பட்ட அதிகாரி விவரம் கேட்பார், கைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மூலம் விவரம் கேட்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.
- தங்கள் விண்ணப்பம் சரியாக இருப்பின் அதிகாரியின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தங்களுக்கான புதுப்பித்தல் விவரம் தங்களது பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அதன் மூலமாக புதுப்பித்தல் செய்யப்பட்ட பதிய பதிவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- ஏற்கனவே உள்ளீடு செய்த தங்களுடைய விபரங்களை சரிபார்த்து ஏற்கனவே அலுவலகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ அல்லது விடுபட்ட விவரங்கள் இருந்தாலோ அவ்விவரங்களை சரிசெய்து சமர்ப்பிக்கலாம். தங்களால் திருத்தம் செய்யப்பட்ட விபரங்களை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அவர்கள் மூலம் ஒப்புதல் பெற்றவுடன் தங்களது பதிவு புதுப்பித்தல் செய்யப்படும்.
- ஏற்கனவே பதிவு அட்டை உள்ளவர்கள் அனைவரும் தங்களது விபரங்களை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். புதுப்பித்தல் நிறைவடைந்தவர்கள் மற்றும் நிறைவடைய உள்ளவர்கள் மட்டும் புதுப்பித்தல் செய்ய விண்ணப்பம் செய்யவேண்டும்.
- தேவைப்படும்பொழுது இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் விவரங்களைப் பார்வையிடலாம், விபரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
மா. குறியீடு மாவட்டத்தின் பெயர்
1. சென்னை
2. காஞ்சிபுரம்
3. திருவள்ளுர்
4. வேலூர்
5. திருவண்ணாமலை
6. சேலம்
7. ஈரோடு
8. தருமபுரி
9. நாமக்கல்
10. கோயமுத்தூர்
11. நீலகிரி
12. கடலூர்
13. விழுப்புரம்
14. நாகப்பட்டினம்
15. தஞ்சாவூர்
16. திருவாரூர்
17. திருச்சி
18. கருர்
19. திண்டுக்கல்
20. பெரம்பலூர்
21. புதுக்கோட்டை
22. மதுரை
23. விருதுநகர்
24. சிவகங்கை
25. இராமநாதபுரம்
26. தேனி
27. திருநெல்வேலி
28. தூத்துக்குடி
29. நாகர்கோயில்
30. கிருஷ்ணகிரி
31. அரியலூர்
32. திருப்பூர்
33. பொன்னேரி
34. வாணியம்பாடி
35. மார்த்தாண்டம்
0 Comments