பொங்கல் பரிசு, தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு


அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2500 பணம் வழங்கப்படும். ஒரு முழு கரும்பு, அரிசி, வெல்லம், உளர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், துணி பை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பும் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு மற்றும் ரூ.2500 பணம் பெற்றுக்கொள்ளலாம். இதனால் தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 இலட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள்என்றும் தமிழக முதல்வர் தெரிவித்து இருந்தார்.

இந்த வருட பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என்றும், மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதியில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என்றும், கொரோனா விழிப்புணர்வுடன் மக்கள் பொங்கலை கொண்டாட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்து இருந்தார்.

பொங்கல் பரிசாக குடும்ப .அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று, தமிழக அரசு இன்று காலை அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பரிசு திட்டத்தை தமிழக முதல்வர் இன்று மாலையே துவங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.













 

Post a Comment

0 Comments