தமிழ்நாடு காவல் துறையில் வேலைவாய்ப்பு 2020 பணியிடங்கள் அறிவிப்பு! TNUSRB RECRUITMENT 2020

TNUSRB  இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர்  அறிவிப்பு 2020

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிபு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்பதவிக்குரிய வயது வரம்பு, கல்வி தகுதி மற்றும் தேர்வு செயல்முறை பற்றி முழுமையான அறிவிக்கையை கீழே வழங்கி உள்ளோம்.

TNUSRB அறிவிப்பு 2020

நிறுவனம்தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)
பணியின் பெயர்சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள்10,906
அறிவிப்பு வெளியான தேதி17.09.2020
விண்ணப்பிக்கும் முறை Online

காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கு 10,906 பணியிடங்களை அறிவிக்க உள்ளது.

மொத்த விவரங்கள்

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 10906

துரைவாரியான காலிப்பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • காவல்துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099.
  • இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டுமே)
  • சிறைத்துறை : இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்தம் 119 பணியிடங்கள், இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7.
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்).
  • இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 (பெண்கள்) மற்றும் சிறைத்துறை - 10 (பெண்கள்).

Download TNUSRB தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள்  18  வயதிற்கும் 24 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • விண்ணப்பதாரர்கள்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த இரண்டு வருடத்திற்குள்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் – Rs. 18,200/- to Rs.52,900/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு  மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில்  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments