Tamil Nadu partners with Coursera to train 50,000 unemployed youths

 TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION:

தமிழகத்தை சேர்ந்த 50,000 வேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க கோர்ஸேரா என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் கூட்டணி அமைத்துள்ளது

உலகளவில் தொழிலாளர்களுக்கு பயிற்சியளிக்க கோர்ஸேரா நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள்ளது. இத்திட்டத்தின் கீழ், வேலையில்லா இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சியளிக்க அரசுகள் கூட்டணி அமைக்கலாம் என்று கோர்ஸேரா நிறுவாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது

இதன்படி தற்போது தமிழக அரசு கூட்டணி அமைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 50,000 வேலையில்லா இளைஞர்களுக்கு 4,000 வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் டேட்டா சைன்ஸ், கிளவுட் கம்பியூட்டிங், பிளாக்செயின், ஏஐ உள்ளிட்ட ஏராளமான பயிற்சிகள் அளிக்கப்படும்.


இதில், கூகுள் ஐடி சப்போர்ட் சான்றிதழ் உள்ளிட்ட உயர்தர சான்றிதழ்களும் கிடைக்கும். எனவே, வேலை தேடுவோர் இந்த கொரோனா காலகட்டத்தில் ஈசியாக பயிற்சி பெற இதுவொரு சிறப்பான திட்டமாகும்.

இதுபற்றி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப திறமையான ஊழியர்களை உருவாக்க நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். வேலை தேடும் மாணவர்களுக்கும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் கொரோனா பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

link   ----------------------------- click here


Post a Comment

0 Comments