How to claim pf amount ஆன்லைன் மூலமாக உங்கள் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி?


பணியில் இருக்கும்போதே நமது பிப் பணத்தை எப்படி பணத்தை எடுப்பது என்று பார்க்கலாம்...


ஒவ்வொரு மாதமும் நமது சம்பளத்தில் இருந்து 12 சதவீத தொகை பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்பணத்தை பெரும்பாலானோர் பிற்காலத்துக்கான சேமிப்பு நிதியாக வைத்திருப்பார்கள்.

சிலருக்கு லட்சம் ரூபாய் பிஎப் சேமிப்பு கணக்கில் இருந்தும் அவசரத்திற்கு எடுத்து பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது. பலருக்கு இந்த கணக்கில் இருந்து எப்படி பணத்தை எடுப்பது என்றே தெரியாமல் விட்டு விடுகின்றனர்.

சுலபமாக பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்...

1.இணையத்தில் `PF membership home’ எனத் தேடுங்கள். அதிகாரப்பூர்வ இணையதளம் வரும். அதன் உள்சென்று உங்களுடைய UAN நம்பரை பதிவிட்டு பாஸ்வேர்ட் டைப் செய்யவும்,

2.பாஸ்வேர்ட் தெரியவில்லை என்றால் `forget pasword’ கொடுக்கலாம். உங்கள் மொபைலுக்கு வரும் `OTP’  எண் மூலம் புது கடவு சொல்லை உருவாக்கி நமது பிஎப் கணக்குக்குள் நுழையலாம்.

3.ஒருவேலை அப்படியும் காட்டவில்லை என்றால், `UAN, password’-க்கு கீழ் Activate `UAN’ என குறிப்பிட்டுள்ளதைக் கிளிக் செய்து பின் `UAN’ நம்பர் `OTP’ மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.

4.UAN, Password’ கிடைத்த பிறகு தங்களுடைய அக்கவுண்ட் நம்பர், ஆதார் எண் என அனைத்தையும் பதிவிட்டுக் கொள்ளவும்.

5.பின் இணையதளத்தின் Home என்பதுக்குள் செல்லவும். பின் `View’ என்று காணப்படும் பகுதியை கிளிக் செய்தவுடன் பாஸ்புக் என்று காட்டும்.

6.பாஸ்புக்கினுள் சென்று மறுபடியும் அதே `UAN’ நம்பர் மற்றும் `Password’ பதிவிட்டு அக்கவுண்டில் இருக்கும் மொத்த பேலன்ஸ் எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளவும்.


பிஎஃப் UAN கணக்கை ஆக்டிவேட் செய்யவும்.


பின் `HOME’ பேஜ்க்கு சென்றால் மெம்பர் ஹோம், பாஸ்புக், ஆன்லைன் சர்வீஸ் என்று காட்டும்.

ஆன்லைன் சர்வீஸ்-ஐ கிளிக் செய்யவும். பின் `Claim Form’ என்ற பகுதிக்குள் செல்லவும்



பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி:


தங்கள் அக்கவுண்டில் இருக்கும் மொத்த பணத்தில் இருந்து 75 % பணம் வரை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் உங்கள் கணக்கில் 1,00,000 ரூபாய் இருந்தால் ரூ.75,000 மட்டும் டைப் செய்து கொள்ளவும். பிறகு காரணங்கள் கேட்கும். அதில் திருமணம், நிதியுதவி, இயலாதோர் பொருள் வாங்குவது, உடல்நலக் குறைவு என்று பல காரணங்களை காட்டும். அதில் ஒன்றை தேர்வு செய்யவும்.




இதன் பின்னர் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உள்ள போன் நம்பருக்கு ஓடிபி வரும். அதை பதிவு செய்துக் கொள்ளவும். கடைசியாக `AGREE Condition’-ஐ டிக் செய்து கொள்ளவும்.

பின் சப்மிட் செய்து விடலாம். அனைத்தும் சரியாக இருப்பின் தாங்கள் முன்னதாக கொடுத்திருந்த வங்கி கணக்கிற்கு அடுத்த சில நாட்களில் பணம் வந்து சேர்ந்துவிடும்.


Post a Comment

0 Comments