அரசு வேலை வேண்டுமா? புதுச்சேரியில் ஒருங்கிணைந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு!

Follow Us

அரசு வேலை வேண்டுமா? புதுச்சேரியில் ஒருங்கிணைந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு!

 அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை ஒரே கட்டமாக நிரப்புவதற்காக மூன்று ஒருங்கிணைந்த தகுதித் தேர்வுகளுக்கான (CGL, CHSL, CSL) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

                                                                                


ஒரே கட்டமாக 484 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு!


ஒரே கட்டமாக 484 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு!


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய அரசுப் பணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை ஒரே கட்டமாக நிரப்புவதற்காக மூன்று ஒருங்கிணைந்த தகுதித் தேர்வுகளுக்கான (CGL, CHSL, CSL) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 484 காலிப் பணியிடங்கள் இந்தத் தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட உள்ளன.


ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதித் தேர்வு (CGL)


பணியிடங்கள்: புள்ளியியல் ஆய்வாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், விவசாய அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, உயர்நிலை எழுத்தர், கள மேற்பார்வையாளர் உட்பட மொத்தம் 327 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


ஒதுக்கீடு: பொதுப் பிரிவு - 142, எம்பிசி - 57, எஸ்சி - 52, ஒபிசி - 32, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 31.


கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடங்களில் பட்டப்படிப்பு (பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வேளாண்மை, பொறியியல் துறைகள்), டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு: அதிகபட்சம் 30 முதல் 32 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (இட ஒதுக்கீட்டின்படி தளர்வு உண்டு).


தேர்வு முறை: 2 தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.


ஒருங்கிணைந்த 12-ம் வகுப்பு தகுதித் தேர்வு (CHSL)


பணியிடங்கள்: கலைஞர் - 1, கீழ்நிலை எழுத்தர் - 129 என மொத்தம் 130 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


தகுதிகள்:


கலைஞர்: 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

கீழ்நிலை எழுத்தர்: 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது வரை.

தேர்வு முறை: 2 தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வு. கலைஞர் பதவிக்கு மட்டும் திறன் தேர்வு நடைபெறும்.


ஒருங்கிணைந்த 10-ம் வகுப்பு தகுதித் தேர்வு (CSL)


பணியிடங்கள்: ஜூனியர் நூலகர் (26) மற்றும் கேலரி உதவியாளர் (1) என மொத்தம் 27 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது வரை.

தேர்வு முறை: 10-ம் வகுப்பு தரத்தில், ஒரே தாளைக் கொண்ட 100 கேள்விகளுக்கான தேர்வு நடைபெறும். இத்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.


விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்


விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்: புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடந்த 5 வருடங்களாக புதுச்சேரியில் வசிப்பவர்கள் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பம் தொடங்கிய நாள்: நவம்பர் 18, 2025.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 14, 2025 பிற்பகல் 3 மணி வரை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ஆர்வமுள்ளவர்கள் https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணல்: பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கடைசித் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Post a Comment

0 Comments