கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்!தமிழக அரசு

Follow Us

கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்!தமிழக அரசு

 தமிழ்நாட்டில், கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு இனி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.


அரசு பணியின்போது உயிரிழக்கும், அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணைப் பணி கோரி விண்ணப்பிப்பதற்காக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார்.


அதன்படி, பணியில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் அரசுப் பணி கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை விதியில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.


விதிகளில் திருத்தம்:


தமிழ்நாடு குடிமைப் பணிகள் (கருணை அடிப்படையிலான பணி நியமனம்) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்படி, இனிமேல் கருணை அடிப்படையிலான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, 'ஆன்லைன்' (Online) வழிமுறை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.


புதிய வலைதளம் துவக்கம்:


பணியின்போது உயிரிழந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணைப் பணி கோரி விண்ணப்பிப்பதற்காக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார்.'


இந்த அரசாணையின்படி, விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டிய புதிய வலைதள முகவரி (www.tncgpa.tn.gov.in) செயல்பாட்டிற்கு வந்தது:


இந்த புதிய வலைதளம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது.


இனிமேல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி நியமனம் கோருபவர்கள் இந்த புதிய வலைதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசாணையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments