TNPSC Group 4: குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு யார் எல்லாம் தகுதி; பட்டியல் வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி

Follow Us

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு யார் எல்லாம் தகுதி; பட்டியல் வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி

 டிஎன்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


                                                                         


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.


இந்தநிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், இளநிலை நிர்வாகி, தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி பெற்றவர்கள் இன்று (அக்டோபர் 29) முதல் நவம்பர் 7 ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


இந்தநிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பது குறித்து இண்டர்நெட் கஃபே தமிழ் என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி,


தேவையான ஆவணங்கள்


1). சமீபத்திய புகைப்படம்


2). 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்


3). 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்


4). பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்


5). சாதிச் சான்றிதழ்


6). தமிழ் வழிச் சான்றிதழ்கள் (தேவைப்படின்)


7). சிறப்பு இடஒதுக்கீட்டு சான்றிதழ்கள் (தேவைப்படின்)


8). தட்டச்சர், சுருக்கெழுத்து, கணினி சான்றிதழ்கள் (தேவைப்படின்)


9). உறுதிமொழிப் படிவம்


இதில் சாதிச் சான்றிதழில் தந்தை பெயர் இருக்க வேண்டும். கணவர் பெயரில் இருக்கும் சாதிச் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளபடாது.


ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து, Registered User என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் ஒருமுறை பதிவெண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைக் கொண்டு உள்நுழைய வேண்டும். உங்களது சுயவிவரப் பக்கத்தில் Upload Documents என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.


அதில் குரூப் 4 தேர்வுக்கான இணைப்பை தேர்வு செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்கள் அனைத்தும் 500kb-க்குள் இருக்க வேண்டும். மேலும் பி.டி.எஃப் வடிவில் இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments