வெறும் ரூ.250 முதலீடு செய்தால் போதும்.. நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்.!

Follow Us

வெறும் ரூ.250 முதலீடு செய்தால் போதும்.. நீங்களும் லட்சாதிபதி ஆகலாம். போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்.!

 இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவிலான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

                                                                               


ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இளமையில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஒவ்வொருவரும் தனது எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட வேண்டியது இருக்கும். அதற்கு சிறந்த சேமிப்பாக தபால் நிலையம் சேமிப்பு திட்டங்கள் அமையும். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மூலமாக பொருளாதார சேவைகளை தபால் நிலையங்கள் வழங்கி வருகின்றன.


நீண்ட கால டெபாசிட் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு அஞ்சல் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி ஒரு பொருத்தமான திட்டம் ஆகும். இதில் 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும். குறைந்தபட்ச 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நாளும் சிறிய தொகையை சேமிப்பதற்காக ஒதுக்கும்போது இந்த திட்டத்தில் இணைந்து நல்ல லாபம் பார்க்க முடியும். தினமும் 250 ரூபாய் சேமித்து மாதந்தோறும் 7500 ஒருவர் முதலீடு செய்யும் போது ஒரு ஆண்டுக்கு டெபாசிட் தொகை 90000 ஆக இருக்கும்.


இதனை அப்படியே 15 ஆண்டுகள் டெபாசிட் செய்யும்போது ஒருவருடைய மொத்த முதலீடு 13,50,000 ஆக இருக்கும். இதற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும். இதன் மூலமாக 10,90,926 ரூபாய் வட்டியுடன் முதலீட்டாளர்கள் 15 ஆண்டுகளில் 24,40,926 ரூபாய் முதிர்வு தொகையாக பெறலாம். PPF என்பது 15 வருட திட்டமாகும். இதில் வாடிக்கையாளர்களுக்கு கடன் பெற வசதியும் உள்ளது. முதலீட்டாளர் இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் கடன் பெறலாம். பாதுகாப்பற்ற கடனை விட இது மலிவானது. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் உடனே முதலீடு செய்து பயன்பெறுங்க

Post a Comment

0 Comments