உங்கள் PF இருப்பு மற்றும் கடைசி பங்களிப்பை அறிய தினமும் இணையதளத்தில் உள்நுழைய தேவையில்லை.
இபிஎப்ஓ (EPFO) உறுப்பினர்கள், UAN போர்ட்டலில் பதிவு செய்திருந்தால், உங்கள் PF இருப்பு மற்றும் கடைசி பங்களிப்பை அறிய தினமும் இணையதளத்தில் உள்நுழைய தேவையில்லை.
EPFO தற்போது ஒரு எளிய மிஸ்டு கால் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு அழைப்பு செய்தால், உடனடியாக உங்கள் PF விவரங்கள் SMS-ல் கிடைக்கும். இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
இந்த சேவை செயல்படுவதற்கு உங்கள் UAN, வங்கி கணக்கு, ஆதார் அல்லது பான் கார்டில் ஒன்றாக KYC முடிக்கப்பட்டிருப்பது அவசியம். மேலும், UAN-ல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே அழைக்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணும் KYC-லும் சரியாக இணைக்கப்பட்டிருந்தால், மிஸ்டு கால் செய்யும் சில நிமிடங்களில் கடைசி பங்களிப்பு மற்றும் PF இருப்பு போன்றவை முக்கியம் தகவல்கள் SMS-ல் கிடைக்கும்.
மிஸ்டு கால் சேவையைப் பயன்படுத்துவதற்கான படிகள் எளிமையானவை. முதலில் உங்கள் மொபைல் எண் UAN-ல் ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும். பிறகு 9966044425 என்ற எண்ணுக்கு அழைக்கவும். இரண்டு ரிங் பிறகு அழைப்பு துண்டிக்கப்படும், பின்னர் உங்கள் கடைசி பங்களிப்பு மற்றும் PF இருப்பு SMS-ல் வரும். இது உங்கள் PF கணக்கை தொடர்ந்து கண்காணிக்க உதவும்.
உங்கள் UAN ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றால், முதலில் EPFO அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது Umang App மூலம் UAN-I ஆக்டிவேட் செய்ய வேண்டும். இணையதளத்தில் 'Manage' பகுதியில் KYC முடித்து ஆதார், பான், வங்கி கணக்கை இணைக்க வேண்டும். உமாங் செயலியில் EPFO > UAN Activation மூலம் OTP சரிபார்த்துப் பதிவு செய்யவும். இதன் மூலம், மிஸ்டு கால் சேவை முழுமையாக செயல்படும்.
0 Comments