அக்டோபரில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை... உங்க வங்கியில் என்றென்று விடுமுறை... செக் பண்ணிக்கோங்க!

Follow Us

அக்டோபரில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை... உங்க வங்கியில் என்றென்று விடுமுறை... செக் பண்ணிக்கோங்க!

 நாடு முழுவதும் அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகளுக்கேற்ப மாறுபடும்.

                                                                        


வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களான அக்டோபர் 5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். உங்க மாநிலத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை செக் பண்ணிக்கோங்க.


அக்டோபர் மாத வங்கி விடுமுறை பட்டியல் :

அக்டோபர் 1: மகாநவமி, ஆயுத பூஜை

அக்டோபர் 2: வியாழக்கிழமை : தசரா, விஜயதசமி, துர்கா பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி

அக்டோபர் 5 -ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 12 -2வது சனிக்கிழமை

அக்டோபர் 13 : ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 19 : ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 20: திங்கட்கிழமை : தீபாவளி


நரக சதுர்த்தசி மற்றும் காளி பூஜை பண்டிகை மராட்டியம், ஒடிசா, சிக்கிம், மணிப்பூர்,ஜம்மு, காஷ்மீர் மற்றும் பீகார் தவிர மற்ற மாநிலங்களில் வங்கிகள் விடுமுறை


அக்டோபர் 21: செவ்வாய்கிழமை தீபாவளி அமாவாசை வார விடுமுறை

அக்டோபர் 22 : புதன்கிழமை : குஜராத், மராட்டியம், கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் விடுமுறை

அக்டோபர் 25 :4 வது சனிக்கிழமை

அக்டோபர் 26 : ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 27 : திங்கட்கிழமை : சத் மஹாபர்வம் பண்டிகையை முன்னிட்டு மேற்குவங்கம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வங்கிகள் விடுமுறை

அக்டோபர் 31 : வெள்ளிக்கிழமை : சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் குஜராத்தில் வங்கிகள் விடுமுறை


இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிப் பணிகளைத் திட்டமிடும்போது, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் விடுமுறை அட்டவணையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

Post a Comment

0 Comments