ஆதார் பிறந்த தேதி அல்லது குடியுரிமைக்கான சான்றா? மத்திய அரசு விளக்கம்!

Follow Us

ஆதார் பிறந்த தேதி அல்லது குடியுரிமைக்கான சான்றா? மத்திய அரசு விளக்கம்!

 ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும்.

                                                                          


இந்த நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம், (UIDAI) ஆதாரின் பண்புகள் மற்றும் பயன்பாடு குறித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆதார் எண் வைத்திருப்பவரின் அடையாளத்தை நிறுவுவதற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம், அங்கீகாரம் அல்லது ஆஃப்லைன் சரிபார்ப்புக்கு உட்பட்டு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஆதார் எண் அல்லது அதன் அங்கீகாரம், ஆதார் எண் வைத்திருப்பவரின் குடியுரிமை அல்லது இருப்பிடத்திற்கான சான்றாக இருக்காது. ஆதார் எண் பிறந்த தேதிக்கான சான்றாக இல்லை என்றும், எனவே, ஆதார் எண் வைத்திருப்பவரின் பிறந்த தேதியை உறுதியாக நிறுவுவதற்கு அதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது..

Post a Comment

0 Comments