தமிழகத்தின் சொத்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு பத்திரங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அதில் பத்திரங்கள் குறித்து அடிப்படை தகவல்கள் ஆன்லைன் முறையில் பெறப்படுகிறது. அதன் மீதான முதல் கட்ட ஆய்வுக்கு பிறகு சம்பந்தப்பட்ட பத்திரம் பதிவுக்கு ஏற்கப்படும். பத்திரப்பதிவை இறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்வது அவசியம்.
இந்நிலையில் ஸ்டார் 3.0 சாப்ட்வேர் தயாரிப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடன் தொடர்பான அடமான பத்திரங்கள் நிறுவனங்கள், இடையிலான சொத்து பரிமாற்ற ஆவணங்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் வராமல் பத்திரங்களை பதிவு செய்ய முடியும். அதே சமயம் நேரில் சென்று பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.
இதனால் பெரும்பாலான மக்கள் நேரில் வந்து பதிவு செய்யும் நடைமுறையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே குறிப்பிட்ட சில பத்திரங்களை சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வராமல் ஆன்லைன் முறையில் மட்டும் பதிவு செய்வதை கட்டாயமாக பதிவுத்துறை திட்டமிட்டுள்ளது. வீட்டின் மீது கடன் வாங்குபவர்கள் அது தொடர்பான அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைக்கின்றனர். அதற்கான அடமான பத்திரத்தை பதிவு செய்வதற்கு மற்றும் ரத்து செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் மூலமாக இறுதியில் வேலையை முடித்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments