மீனவளத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

Follow Us

மீனவளத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

 கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

                                                                                       


மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


மீன்வள உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 3


பாம்பாறு அணை மீன்வள ஆய்வாளர் அலுவலகம் - 1


கிருஷ்ணகிரி அரசு மீன்பண்ணை மீன்வள ஆய்வாளர் அலுவலகம் - 2


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், மீன்பீடி வலைப் பின்னுதல், பரிசல் ஓட்டுதல், வீச்சு வலை வீசுதல் மற்றும் பழுதடைந்த வலைகளை சரி செய்தல் ஆகிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி, பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பம் செய்யலாம்.


சம்பளம்: ரூ. 15,900 - 58,500


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்), 5/596, ஒளவையார் தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தருமபுரி - 636705


விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2025


இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


 

Post a Comment

0 Comments