பெண்களுக்கு தமிழக அரசு துறையில் வேலை.. ரூ. 35,000 சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!

Follow Us

பெண்களுக்கு தமிழக அரசு துறையில் வேலை.. ரூ. 35,000 சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!

 பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை மாவட்ட சமூக நல அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

                                                                         


பணியிட விவரம்:


மைய நிர்வாகி – 5


மூத்த ஆலோசகர் – 5


தகவல் தொழில்நுட்ப பணியாளர் – 5


வழக்கு பணியாளர்கள் – 30


பாதுகாப்பாளர் – 10


பன்முக உதவியாளர் – 10


காலியிடங்கள் மற்றும் தகுதி:


மைய நிர்வாகி, வழக்கு பணியாளர், மூத்த ஆலோசகர்


* சமூகப் பணியில் அல்லது உளவியலில் முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.


* பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு திட்டங்கள் தொடர்பாக குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Staff)


* கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் / டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.


* மாநில, மாவட்ட அல்லது தன்னார்வ அமைப்புகளில் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.


பாதுகாப்பாளர் (Security)


* பாதுகாப்புப் பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பன்முக உதவியாளர் (Multi-purpose Helper)


* சமையல் மற்றும் அலுவலக பராமரிப்பு பணிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்


மைய நிர்வாகி – ரூ. 35,000

மூத்த ஆலோசகர் – ரூ.22,000

தகவல் தொழில்நுட்ப பணியாளர் – ரூ.20,000

வழக்கு பணியாளர்கள் – ரூ.18,000

பாதுகாப்பாளர் – ரூ.12,000

பன்முக உதவியாளர் – ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதி மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் https://chennai.nic.in/ என்ற மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது இமெயில் முகவரி மூலமோ அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025 மாலை 5 மணி வரை.


முகவரி


மாவட்ட சமூகநல அலுவலகம்,


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,


8வது தளம், சிங்காரவேலர் மாளிகை,


ராஜாஜி சாலை,


சென்னை – 01.


இமெயில் முகவரி : oscchennaib@gmail.com

Post a Comment

0 Comments