1,000 மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு.. தமிழக அரசு புதிய அறிவிப்பு..!

Follow Us

1,000 மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு.. தமிழக அரசு புதிய அறிவிப்பு..!

 தமிழகத்தில் பெண்களுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

                                                                          


இந்த திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியுடைய பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில் பலருக்கும் இன்னும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் உள்ளது.


இதனால் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தகுதி உள்ள பெண்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிகிறது.


இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. வட்டாட்சியர்கள் தங்கள் பகுதியில் உள்ள மனுக்களை பிரித்தளித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து அதற்கான செயலியில் பதிவு செய்ய வேண்டும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் எந்த நேரத்திலும் ஆய்வுக்காக வீட்டிற்கு வரலாம்.

Post a Comment

0 Comments