இனி PF பணத்தை ATMமில் எடுக்கலாம். தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!!

Follow Us

இனி PF பணத்தை ATMமில் எடுக்கலாம். தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!!

 தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தங்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும் தொழிலாளர்களும் செலுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் இதில் எட்டு கோடிக்கும் மேலானோர் சந்தாதாரர்களாக உள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு புதிய டிஜிட்டல் சேவையை வழங்கி வருகிறது. அதன்படி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் இயந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இதேபோல் வருங்கால வைப்பு நிதி கணக்கை ubi என்னுடன் இணைத்து வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை வரவு வைத்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் அடுத்த மாதம் 10, 11ம் தேதிகளில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் இது தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது தீபாவளி பண்டிகை பரிசாக இந்த வசதி அறிமுகப்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments