உங்கள் PAN CARD தொலைந்து விட்டால் என்ன செய்வது..? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?

Follow Us

உங்கள் PAN CARD தொலைந்து விட்டால் என்ன செய்வது..? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..?

 பான் கார்டு என்பது இந்தியாவில் நிதி மற்றும் வரி தொடர்பான அனைத்து முக்கிய நடவடிக்கைகளுக்கும் இன்றியமையாத ஓர் அடையாள அட்டையாகும். வெறும் அடையாள ஆவணம் மட்டுமின்றி, வங்கிச் சேவைகள், வருமான வரி தாக்கல், பங்குகள் வாங்குதல், கடன் பெறுதல் போன்ற பல விஷயங்களுக்கு இந்த 10 இலக்க எண் அட்டை அவசியம் தேவைப்படுகிறது.

                                                                         


பான் கார்டில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய விவரங்கள் இருக்கும் என்பதால், இது அரசாங்க மற்றும் நிதி நிறுவனங்களிடம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவுகிறது. ஒருவேளை உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டால், அச்சம் அடையாமல் அதை உடனடியாக மீண்டும் பெறுவது மிகவும் முக்கியம். வருமான வரித்துறை இதற்கான எளிய வழிமுறைகளை ஆன்லைனில் வழங்குகிறது.


புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை :


* முதலில், https://onlineservices.nsdl.com/paam/ReprintPAN.html என்ற NSDL இணையதளத்திற்கு செல்லவும்.


* ‘Application Type’ பிரிவில், “Reprint of PAN card (No change in PAN data)” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.


* பின்னர் உங்கள் பான் எண், ஆதார் எண் (கட்டாயம்), பிறந்த தேதி மற்றும் Captcha குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டு ‘Submit’ பொத்தானை அழுத்தவும்.


* உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை உள்ளிட்டுச் சரிபார்க்க வேண்டும்.


* இந்தியாவில் உள்ளவர்கள் ரூ.50, வெளிநாடுகளில் உள்ளவர்கள் ரூ.959 வரையும் கட்டணம் செலுத்த வேண்டும். இதை Netbanking, Debit/Credit Card அல்லது UPI மூலம் செலுத்தலாம்.


* விண்ணப்பம் வெற்றிகரமாக முடிந்தவுடன், 15 இலக்க ஒப்புகை எண் (Acknowledgement Number) கிடைக்கும். இதைப் பயன்படுத்தி உங்கள் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்கலாம்.


* சமர்ப்பித்த 15 முதல் 20 நாட்களுக்குள் புதிய பான் கார்டு உங்கள் முகவரிக்குத் தபால் மூலம் வந்து சேரும். அதேசமயம், e-PAN (PDF) நகல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.


e-PAN பெறுவது எப்படி..?


நீங்கள் விரைவாக மின்-பான் நகலைப் பெற விரும்பினால், Income Tax Portal-இன் Download e-PAN தளத்திற்குச் செல்லலாம். அங்கு, பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்த்தால், e-PAN நகலை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments