இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு B அதிகாரி பணியிடங்கள்

Follow Us

இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு B அதிகாரி பணியிடங்கள்

 இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது சேவைகள் வாரியம் மூலம் கிரேடு 'B' அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆரம்பகட்ட அடிப்படைச் சம்பளமாக ₹78,450 வழங்கப்படும். வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட அனைத்து அலவன்ஸ்களுடன் மாத வருமானம் சுமார் ₹1.5 லட்சம் வரை இருக்கும்.


காலியிட விவரம்:


பொதுப் பிரிவு (General): 83


பொருளாதாரம் & கொள்கை ஆராய்ச்சி (DEPR): 17


புள்ளிவிவரம் & தகவல் மேலாண்மை (DSIM): 20


விண்ணப்பத் தேதிகள்:


தொடக்கம்: செப்டம்பர் 10, 2025


நிறைவு: செப்டம்பர் 30, 2025 (மாலை 6 மணி வரை)


விண்ணப்பம் செய்ய: rbi.org.in என்ற RBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம்


தேர்வு அட்டவணை:


பொதுப் பிரிவு:


முதல் கட்டம்: அக்டோபர் 18, 2025


இரண்டாம் கட்டம்: டிசம்பர் 6, 2025


DEPR & DSIM பிரிவுகள்:


முதல் கட்டம்: அக்டோபர் 19, 2025


இரண்டாம் கட்டம்: டிசம்பர் 7, 2025


தகுதி நிபந்தனைகள்:


வயது வரம்பு: செப்டம்பர் 1, 2025 முதல் , 21 - 30 வயது. (ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு)


கல்வித் தகுதி:


பொதுப் பிரிவு: எந்த துறையிலும் பட்டம் - குறைந்தபட்சம் 60% (SC/ST/PwBD - 50%). முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு 55%.


DEPR: பொருளாதாரம் அல்லது நிதித்துறையில் முதுகலைப் பட்டம் - குறைந்தபட்சம் 55% (SC/ST/PwBD - 50%).


DSIM: புள்ளியியல், கணிதம், டேட்டா சயின்ஸ், AI, ML போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் - 55% (SC/ST/PwBD - 50%). அல்லது 4 வருடப் பட்டப்படிப்பில் 60%.


விண்ணப்பக் கட்டணம்:


பொது/OBC/EWS - ₹850 + ஜிஎஸ்டி


SC/ST/PwBD - ₹100 + ஜிஎஸ்டி


RBI ஊழியர்கள் - கட்டணம் விலக்கு


இந்த வேலை வாய்ப்பு மூலம் நிலையான பணியுடன், அதிகளவிலான சம்பள வசதி கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments