திருச்சியில் மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை..! இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க

Follow Us

திருச்சியில் மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை..! இளைஞர்களே உடனே அப்ளை பண்ணுங்க

 மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மைய அலகில் ஒரு வருட தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்பார்வையாளர் (SUPERVISOR) : 3 பணியிடம்

தொகுப்பூதியம் - ரூ.21,000/- (ஒரு மாதத்திற்கு)

தகுதி:


சமூகப்பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமுதாய சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் (10+2+3 மாதிரி), கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். (B.A in Social Work / Computer Science / Information Technology/ Community Sociology Social Science)

அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்


வயதுவரம்பு:


01.08.2025 அன்றுபடி 42 வயதிற்கு பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும்.

அவசர உதவி மைய சேவைகளில் முன்அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு (மட்டும் 2025-26 நிதியாண்டின் இறுதி வரை) 10 ஆண்டுகள் வரை ஒரு முறை வயது தளர்வு அனுமதிக்கப்படலாம்.

வழக்குபணியாளர் -CASEWORKER : 3 பணியிடங்கள்


தொகுப்பூதியம்: ரூ.18,000/- (ஒரு மாதத்திற்கு)

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது இணையான வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பணி அனுபவம் மற்றும் நல்ல முறையிலான தகவல் தொடர்பு திறன் (பேச்சு திறன்) பெற்றிருக்க வேண்டும்.

அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

வயதுவரம்பு


01.08-2025 அன்றுபடி 42 வயதிற்கு பூர்த்தி அடையாதவர்களாக இருக்க வேண்டும்.

அவசர உதவி மைய சேவைகளில் முன்அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு (மட்டும் 2025-26 நிதியாண்டின் இறுதி வரை) 10 ஆண்டுகள் வரை ஒரு முறை வயது தளர்வு அனுமதிக்கப்படலாம்

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல், பணி அனுபவ சான்றுகளின் நகல் இணைக்கப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப்படிவங்கள், உரிய சான்றிதழ்களின் நகல் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும். மேற்கண்ட பணியிடங்கள் தற்காலிகமான மதிப்பூதிய அடிப்படையிலானது.


மேற்கண்ட பதவிகளுக்கான விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 11.09.2025முதல் 24.09.2025அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.


மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,

N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு,

கலையரங்கம் வளாகம்,

திருச்சிராப்பள்ளி - 620 001.


மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments