போடு வெடிய..! குஷியில் பெண்கள். தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்கும். உதயநிதி அதிரடி அறிவிப்பு..!!

Follow Us

போடு வெடிய..! குஷியில் பெண்கள். தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 கிடைக்கும். உதயநிதி அதிரடி அறிவிப்பு..!!

 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் நிச்சயமாக நலத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

                                                                        


உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்றும், உரிமைத்தொகை பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல பெண்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு தற்போது உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உயர்த்தப்படும். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பித்த தகுதியுள்ள பெண்கள் அனைவரும் நிச்சயமாக இந்தத் தொகையைப் பெறுவார்கள்" என வலியுறுத்தினார். திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்விலும் பங்கேற்ற அவர், அரசின் நலத்திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்துக்காக உறுதியுடன் செயல்படுவதாக கூறினார்.

Post a Comment

0 Comments