ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். பயிற்சி மட்டுமின்றி, வேலைவாய்ப்பும் அரசின் மூலமே ஏற்பாடு செய்து தரப்படும்.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு தங்கும் வசதியும், உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.
தாட்கோ இலவச பயிற்சிகள்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இணைத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில், இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. சுயதொழில் தொடங்க உதவும் வகையில் பயிற்சிகள், நிதியுதவி, கடன் வசதி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கான திறன் வளர்ச்சி பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில், பல்வேறு வகையான பயிற்சிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படும்.
வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு
அந்த வகையில், நவீன தேவைக்கு ஏற்ப வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சியை 3 மாதங்களுக்கு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பயிற்சியை பெற சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தகுதியை கொண்டவர்கள் ஆன்லைன் வழியாகவே விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காட்சி தொடர்பான நவீன தொழில்நுட்பத்தில் வீடியோ என்பது இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. சினிமா, காட்சி ஊடகம், தனியார் நிறுவனங்கள், விளம்பரம், அரசு சாரந்த நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வீடியோ எடுப்பது மற்றும் எடிட்டிங் திறன் கொண்டவர்களுக்கான தேவை அதிகளவில் உள்ளது. இத்திறனுடன் கல்யாணம், சுப நிகழ்ச்சிகளுக்கு காட்சி பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் வகையில் சொந்தமான தொழிலும் தொடங்கலாம்.
யாரெல்லாம் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்?
தாட்கோ வழங்கும் இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதார்கள் 18 முதல் 30 வயது வரை கொண்டவராக இருக்க வேண்டும்.
மேலும், அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு ஏற்பாடு
தாட்கோ மூலம் வழங்கப்படும் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். அதனுடன் மிக முக்கியமாக வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்துதரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள் பயிற்சி காலத்தில் செலவை குறித்து கவலை இல்லாமல், பயிற்சியில் கவனம் செலுத்தி பயிலலாம்.
3 மாத பயிற்சி
தாட்கோ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இப்பயிற்சி 3 மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தாட்கோவின் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tahdco.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதார்களின் புகைப்படம்
வகுப்பு பிரிவு சான்றிதழ் (சாதி சான்றிதழ்)
பட்டப்படிப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
புத்திரை வண்ணன் உறுப்பினர் சான்றிதழ் (இருப்பின்)
ஆதார் எண்
படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : வகுப்பு, வகுப்பு பிரிவு, கல்வித்தகுதி, தேர்ச்சி ஆண்டு ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
படி 3 : "Proceed" கொடுத்தால், கூடுதல் விவரங்களுக்கான பதிவு திறக்கும்.
படி 4 : அதில் பெயர், தந்தை பெயர், தாய் பெயர், குடும்ப வருமானம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்.
படி 5 : வகுப்பு பிரிவு சான்றிதழ் எண், ஆதார் எண், போன் எண், இமெயில் முகவரி ஆகியவை கட்டாயமாகும்.
படி 6 : தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
படி 7 : இறுதியாக Declaration சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
தங்கும் வசதியுடன் வீடியோ எடுப்பது எப்படி, எடிட்டிங் செய்வது எப்படி என்பதை நிபுணர்களிடம் இருந்து கற்றுகொள்ள விரும்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம்.
0 Comments