உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் (FACT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
எழுத்தர்
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.25000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (3 ஆண்டு அல்லது 6 செமஸ்டர் படிப்புகள் மட்டும்) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும்.
SC/ ST - 5 ஆண்டுகள்,
OBC - 3 ஆண்டுகள்,
PwBD - 10 ஆண்டுகள்
பணியிடம்: ஒடிசா, தெலுங்கானா,தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://fact.co.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான ஆவண நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
DGM(HR),
HR Department,
FEDO Building, FACT,
Udyogamandal, PIN-683501
விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை
தேர்வு செய்யும் முறை:
தகுதிப் பட்டியல்
ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2025
0 Comments