SBI வங்கியில் வேலை.. ரூ. 46 ஆயிரம் சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Follow Us

SBI வங்கியில் வேலை.. ரூ. 46 ஆயிரம் சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

 ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 2025 ஆம் ஆண்டிற்கான கிளார்க் (ஜூனியர் அசோசியேட் – வாடிக்கையாளர் உதவி மற்றும் விற்பனை) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 6589 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

                                                                              


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையில் பட்டப்படிப்பு (31.12.2025-க்குள் முடித்திருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்கள், முடிவுகள் வெளியாகி பட்டப்படிப்பு முடித்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


வயது வரம்பு: 20 முதல் 28 வயது (01.04.2025 அன்று). வயது தளர்வு: எஸ்சி/எஸ்டி: 5 ஆண்டுகள் ஓபிசி: 3 ஆண்டுகள் மாற்றுத்திறனாளிகள்: 10-15 ஆண்டுகள் (பிரிவைப் பொறுத்து)


சம்பளம்: தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் தோராயமாக ரூ.46,000 வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு (Prelims), முதன்மைத் தேர்வு (Mains) மற்றும் மொழித் திறன் தேர்வு (LPT) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


எப்படி விண்ணப்பிப்பது?


அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in-ஐ பார்வையிடவும்.

"Careers" பிரிவில் சென்று "SBI Clerk Notification 2025" என்பதை கிளிக் செய்யவும்.

"Apply Online" இணைப்பை தேர்ந்தெடுக்கவும்.

அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பெறவும்.

பதிவு எண் மற்றும் கடவுச்சொல் மூலம் மீண்டும் உள்நுழையவும்.

மீதமுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும். பிரிவு வாரியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.

"Submit" பொத்தானை கிளிக் செய்து, விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 26, 2025 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்

Post a Comment

0 Comments