ரூபாய் நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? சூப்பர் சான்ஸ்! விட்றாதீங்க

Follow Us

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? சூப்பர் சான்ஸ்! விட்றாதீங்க

 ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இயங்கும், பாரதிய ரிசர்வ் பேங் நோட் முத்ரான் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

                                                                              


இங்கு தான் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. துணை மேலாளர், செயல்முறை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.


ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் பாரதிய ரிசர்வ் பேங் நோட் முத்ரான் பிரைவேட் லிமிட்டெட். கர்நாடக மாநிலம் மைசூர், மேற்கு வங்க மாநிலம் சல்போனி ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் அச்சகங்கள் உள்ளன. ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணியில் இந்த அச்சகம் ஈடுபடுகிறது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த நிறுவனத்தில் தற்போது ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 88 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு என்ன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.


பணியிடங்கள் விவரம்:


துணை மேலாளர் - பிரிண்டிங்: 10


துணை மேலாளர் - எலக்ட்ரிக்கல்: 03


துணை மேலாளர் - கணினி: 02


துணை மேலாளர் - பொது: 09


செயல்முறை உதவியாளர் (டிரெய்னி) தரம்-I: 64


என மொத்தம் 88 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:


துணை மேலாளர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த பிரிவில் என்ஜினியரிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது.


துணை மேலாளர் பணியிடங்களுக்கு மேனேஜ்மெண்ட் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம். மேலாண்மை பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் பணி அனுபவம் தேவை.

Process Assistant Grade (டிரெய்னி) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், கெமிக்கல் என்ஜினியரிங் உள்ளிட்ட ஏதேனும் பிரிவுகளில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். லெட்ட பிரஸ்/ஆப்செட் /பிளேட் மேக்கிங்/ கிராபிக் ஆர்ட்ஸ்/ ஃபிட்டர்/எலக்ட்ரிஷியன்/ஏசி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். அப்ரெண்டீஸ் பயிற்சி பெற்றிருந்தால் அதுவும் அனுபவமாக கருதப்படும்.


வயது வரம்பு:


18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.


சம்பளம் எவ்வளவு?


துணை மேலாளர் - ரூ. 88,638/-


Process Assistant Grade-I - ரூ..24,500/-

விண்ணப்பிப்பது எப்படி?


தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி , பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. பிற பிரிவினருக்கு ரூ. 600 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.


தேர்வு முறை:


எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். இது குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.


சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், அகமதாபாத், புவனேஷ்வர், கவுகாத்தி, ஹூப்ளி, ஐதரபாத், ஜெய்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, மைசூரு, டெல்லி, பாட்னா, ராஞ்சி, ராய்பூர், சில்குரி உள்ளிட்ட 19 நகரங்களில் நடைபெறும். விண்ணப்பிக்க வரும் 31.08.2025 அன்று கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரர்கள் www.brbnmpl.co.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க: https://www.brbnmpl.co.in/wp-content/uploads/2025/08/BRB-AD-DM-PS-2025-07082025.pdf

Post a Comment

0 Comments