தமிழகத்தில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறை அமலில் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தான் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் பொது தேர்வு எழுதுவதால் மாணவர்கள் சிரமப்படுவதாக பெற்றோர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்படியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதலே பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை தொடரும் என்றும் பத்து மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொது தேர்வு நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 Comments