TNPL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன..
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (கணக்கு) 1
உதவி ஜென்ரல் மேனேஜர் (நிதி) 1
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் (இன்ஸ்ரூமெண்டேஷன்) 1
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் / உதவி ஜென்ரல் மேனேஜர் (Tissue Machine Production) 1
உதவி மேனேஜர் (Tissue Machine Production) 2
உதவி மேனேஜர் (Laboratory) 1
அதிகாரி (Digital Marketing) 2
மொத்தம் 9
வயது வரம்பு
தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.08.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 46 வயது முதல் அதிகபடியாக 57 வயது வரை இருக்கலாம்.
உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 43 வயது முதல் அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 46 முதல் அதிகபடியாக 57 வயது வரை இருக்கலாம்.
உதவி மேனேஜர் பதவிக்கு 28 வயது முதல் அதிகபடியாக 43 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு சிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்து குறைந்தபட்சம் 26 வருட அனுபவம் தேவை.
உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு சிஏ தகுதியுடன் 23 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Instrumentation பிரிவில் டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு இன்ஸ்ரூமெண்டேஷன் தொழில்நுட்பம், கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல், மின்னணுவியல் மற்றும் கருவியியல் பொறியியல் ஆகியவற்றில் B.E. / B.Tech அல்லது செயல்முறை
கருவி பாடத்தில் பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 26 ஆண்டு அனுபவம் தேவை.
Tissue Machine Production பிரிவில் உள்ள டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு கெமிக்கல் பொறியியல், கெமிக்கல் தொழில்நுட்பம், கூழ் மற்றும் காகித தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் அல்லது அறிவியல் பட்டப்படிப்புகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 23 ஆண்டு அனுபவம் தேவை.
Tissue Machine Production பிரிவில் உள்ள உதவி மேனேஜர் பதவிக்கு கெமிக்கல் பொறியியல் சார்ந்த படிப்புகளில் பட்டப்படிப்பும், 8 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
உதவி மேனேஜர் பதவிக்கு கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் உள்ள அதிகாரி பதவிக்கு கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், டிஜிட்டல் மார்க்கெட்டிக்கிங் ஆகியவற்றில் பட்டப்படிப்பு, எம்பிஏ முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.86,600 முதல் ரூ.1,81,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.70,100 முதல் ரூ.1,46,960 வரை சம்பளம் வழங்கப்படும்.
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் / உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.70,100 முதல் ரூ.1,81,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
உதவி மேனேஜர் பதவிக்கு ரூ.31,100 முதல் ரூ.65,350 வரை சம்பளம் வழங்கப்படும்.
அதிகாரி பதவிக்கு அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை
தமிழ்நாடு அரசின் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறை குறித்த தகவல் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
விண்ணப்பிக்கும் முறை
https://tnpl.com/work-with-us/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கல்வித்தகுதி, அனுபவம், முந்தைய நிறுவனங்கள் பெற்ற சம்பள விவரம் ஆகியவற்றுக்கான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments