இ சேவை மையம் போகாமல், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

Follow Us

இ சேவை மையம் போகாமல், ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

 இ சேவை மையம் போகாமலேயே.. ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

                                                                              


பலரும் இன்றைக்கு ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்கிறார்கள். அப்படி ஊர் விட்டு ஊர் வந்துவேலை செய்யும் பலர், கார்டில் முகவரியை மாற்றாமலேயே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால் அரசின் உதவி தொகைகளை பெற சொந்த ஊர் தான் செல்ல வேண்டியதிருக்கிறது. அதேபோல் வெளியூர் கார்டு என்றால் மாதக்கடைசியில் வர சொல்வார்கள். இந்நிலையில் அவர்கள் வீட்டில் இருந்த படியே ரேஷன் கார்டில் முகவரியை மாற்றிக் கொள்ள முடியும்.


ரேஷன் கார்டு என்பது தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் முக்கியமானது. மானிய விலையில் உணவு பொருட்கள், விலையில்லா அரிசி வாங்குவதற்கு ரேஷன் கார்டு வேண்டும்.ரேஷன் கார்டு என்பது கிட்டதட்ட குடியுரிமைக்கு சமம். ரேஷன் கார்டு வாங்கி நிரந்தரமாக வசிப்பவர்களே வாக்காளர்களாக மாற முடியும். அதேபோல் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.


உதவி தொகை


முதியோர் உதவி தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, மானிய விலையில் கேஸ் கனெக்சன், விதவையர் உதவி தொகை என அரசின் பல்வேறு உதவி தொகை ரேசன் கார்டு அவசியம் ஆகும்.இயற்கை பேரிடர் நிதி, பொங்கல் பரிசு போன்றவை வாங்கவும் ரேஷன் கார்டு அவசியம் ஆகும். உதவி தொகைகளை தாண்டி, அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு பயன்படுகிறது. ஒருவரின் அடையாளமாக ரேஷன் கார்டு பார்க்கப்படுகிறது.


சென்னை கோவை மக்கள்


இன்றைக்கு பலர் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களுர் என பல்வேறு ஊர்களுக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்து வாழ்க்கிறார்கள். அவர்கள் ரேஷன் கார்டில் முகவரியை மாற்றாமலேயே பொருட்களை வாங்கி கொள்ள முடியும். எனினும் வெளியூர் கார்டு என்றால் ரேஷனில் பொருட்கள் உடனே கிடைக்காது. மாதக்கடைசியில் தான் வாங்குவதற்கு அனுமதிக்கிறார்கள். மாதத்தின் தொடக்கத்திலேயே விரும்பிய நாட்களிலோ போய் பொருட்களை வாங்க முடியாது. அவர்கள் ரேஷன் கார்டில் முகவரி மாற்றினால் தான் கடையில் பொருட்களை வாங்க முடியும்.

முகவரி மாற்றுவது எப்படி


அதற்கு குடியேறிய முகவரியில் கேஸ் சிலிண்டர் பில் வேண்டும்.அது ஒன்று இருந்தாலே எளிதாக முகவரியை ஆன்லைனில் மாற்றிவிடலாம். https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு போக வேண்டும். அதில் முகவரி மாற்ற என்ற ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.அதில் மொபைல் நம்பரை கொடுக்கவேண்டும். அதன் கீழ் கேப்சியா எழுத்துக்கள் இருக்கும். அதை நிரப்ப வேண்டும். பின்னர் ஓகே கொடுத்தால் ஓடிபிகேட்கும். ஓடிபியை பதிவு செய்தபின்னர் புதிய பக்கம்திறக்கும். அதில் உங்களின் பழைய முகவரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டும். அதற்கு கீழ் நீங்கள் மாறிய புதிய முகவரி விவரங்களை பதிவிடுங்கள். வீட்டு எண், எத்தனையாவது மாடி, என்ன கட்டிடம், தெரு என்பதை ஆங்கிலத்தில் பதிவிட வேண்டும். அடுத்தததாக 2வது லைனில் மாவட்டம், தாலுகா, கிராமம் என எல்லாவற்றையும் செலக்ட் செய்யும் வகையில் இருக்கும். மூன்றாவது லைனில் அஞ்சல் குறியீடு புதியமுகவரிக்கு எது வருமோ அதை நிரப்ப வேண்டும். அதன்பிறகு இதேசெயல்முறை படி முகவரியை தமிழிலும் நிரப்ப வேண்டும்.


கேஸ் பில்


இறுதியாக புதிய முகவரியில் வசிப்பதற்கான ஆவணங்களின் நகல் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கேஸ் பில், வீட்டு வரி ரசீது, வாடகை ஒப்பந்தம், இபி பில், வீடு ஆவணம், தொலைப்பேசி ரசீது, ஓட்டுர் உரிமம், வங்கி பாஸ்புக், பான் அட்டை, குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு ஆவணம், தபால் அடையாள அட்டை என15 ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும். இணைத்த பின்னர் ஒரு வாரத்தில் முகவரி மாறி இருக்கும். புதிய கடை எண் உங்களுக்கு ஒதுக்கப்படும். அதை வைத்து பொருட்களை கடைகளில் வாங்கி கொள்ளலாம்.

நகல் குடும்ப அட்டை


அதேபோல் முகவரி மாறிய பின்னர் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதை ஆன்லைனில் செய்யலாம். இல்லை என்றால் இசேவை மையம் சென்று அப்படியே டவுன்லோடு செய்து அவர்கள் தருவார்கள். அங்கேயே முகவரி மாறிய நகல் அட்டை வாங்கி கொள்ளலாம். அதை ஆவணமாக பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments