சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ உள்ளிட்ட டாக்சி சேவை தளங்கள் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன
இந்த செயலியில் உள் நுழைந்து கார், ஆட்டோ அல்லது பைக் ஆகியவற்றை புக் செய்து கொள்ளலாம். இதற்காக குறிப்பிட்ட தூரத்திற்கு இவ்வளவு என கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தனியார் கார் அல்லது ஆட்டோவை வாடகைக்கு எடுக்கும்போது குறைந்த தூரத்திற்கு அதிக செலவு ஆவதகாவும், அதே செயலி மூலம் முன்பதிவு செய்தால் சற்று குறைவதால் இதனை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். தனி நபர் மற்றும் செல்வது என்றால் பைக் டாக்சிகளை புக் செய்து செல்கின்றனர். இதனால் செலவு குறைகிறது.
ஆனால் கார், ஆட்டோ மற்றும் பைக் டாக்ஸி செயலிகள் வரன்முறைபடுத்தப்படாததாக உள்ளது. செயலியில் காட்டும் கட்டணம் ஒன்றாக உள்ள நிலையில், ஓட்டுனர் கூடுதல் கட்டணம் தர வேண்டும் என்றும் வற்புறுத்துவதாக குற்றம்சாட்டு எழுந்தது. மேலும், வாடிக்கையாளர் காத்திருக்கும் சூழலில், கூடுதல் பணம் தரவில்லை என்றால் புக்கிங்கை கேன்சல் செய்துவிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனை வரன்முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் கார், ஆட்டோ மற்றும் பைக் டாக்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கான தனது முதல் கொள்கையை இந்த மாதம் இறுதியில் தமிழக அரசு வெளியிட உள்ளது. இது மத்திய அரசின் மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதல்கள் 2025 க்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் மூலமாக ஒருங்கிணைப்பாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் பயணிகள் மற்றும் வாடகை வாகனம் இயக்குபவர்கள் இடையே ஒருங்கிணைப்பாளர்களுக்கான எந்த ஒரு முறையான கட்டமைப்பும் இல்லை. குறிப்பாக பைக் டாக்சிகள் தெளிவான கட்டண விதிகளோ, பாதுகாப்பு தரங்களோ அல்லது குறை தீர்க்கும் வழிமுறைகளோ இல்லாமல் ஒரு சட்டப்பூர்வமற்ற நிலையில் இயங்கி வருகின்றன. குறிப்பாக தற்போது இருசக்கர வாகனங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
புதிய கொள்கையில் பைக் டாக்சிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வழங்கும். பைக் taxi களுக்கான பயணத்தின் முதல் மூன்று கிலோ மீட்டருக்கு மாநில அரசு அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்கும். தேவைக்கு ஏற்ப அடிப்படைக் கட்டத்தில் 50 முதல் 200 சதவிகிதம் வரை டைனமிக் விலையை நிர்ணயிக்க அனுமதிக்கப்படும்.
இதன்மூலம் சொந்த வாகனங்களை பயன்படுத்தும் ஓட்டுனர்களுக்கு கட்டணத்தில் குறைந்த பட்சம் என்பது சிறிது பங்கு கிடைக்கும். நியாயமற்ற முறையில் பயணங்களை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும். அனைத்து டிஜிட்டல் பயண தளங்களுக்கும் ஐந்து வருட காலத்திற்கு 5 லட்சம் ரூபாய் உரிமக் கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த வரைவு வழிகாட்டுதல்கள் முதலில் அரசிதழில் வெளியிடப்படும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகு இறுதி செய்யப்படும். அதன்பிறகு செயலி உருவாக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கொள்கை முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். அப்படி அமல்படுத்தப்பட்டு செயலியில் காட்டும் கட்டணத்திற்கு மேல் ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் கேட்பது தவிர்க்கப்படும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.
0 Comments