அரசு நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் அபாயம்

Follow Us

அரசு நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் நியமனம்: டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் அபாயம்

 அரசுத் துறை​கள் மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களில் அவுட்​சோர்​சிங் முறை​யில் பணி​யாளர்​களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது.

இதன் காரண​மாக டிஎன்​பிஎஸ்சி மூலம் மேற்​கொள்​ளப்​படும் நேரடி பணிநியமனங்​களின் எண்​ணிக்கை குறை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

                                                                              


தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்​குத் தேவைப்​படும் ஊழியர்​களும், அலு​வலர்​களும் தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பஇஎஸ்​சி) மூல​மாக​வும், அரசுப் பள்ளி ஆசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யம் வாயி​லாக​வும், காவல், தீயணைப்​பு, சிறைத் துறைப் பணி​யாளர்​கள் தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக​வும் தேர்​வுசெய்​யப்​பட்டு பணி​யில் அமர்த்​தப்​படு​கிறார்​கள். மருத்​து​வர்​கள், செவிலியர்கள் உள்​ளிட்ட மருத்​து​வப் பணி​யாளர்​கள் எம்​ஆர்பி எனப்​படும் மருத்​து​வப் பணி​கள் தேர்வு வாரி​யம் மூல​மாக தேர்​வுசெய்​யப்​படு​கின்​றனர்.


தமிழக அரசின் பல்​வேறு துறை​களி​லும், அரசுப் பள்​ளி​களி​லும் 8 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் பணி​யாற்றி வரு​கின்​றனர். அரசுப் பணி​யில் 4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலி பணி​யிடங்​கள் இருப்​ப​தாக​வும், அவற்றை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என்​றும் அரசு ஊழியர் சங்​கங்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றன.

இதற்​கிடையே, 2026-ம் ஆண்டு ஜனவரிக்​குள் அரசுப் பணி​யில் 75 ஆயிரம் காலி பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்​டப்​பேர​வை​யில் அறி​வித்​தார். பேரவை விதி 110-இன் கீழ் அறி​விப்பை வெளி​யிட்​டுப் பேசிய அவர், 'தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக 17, 595 பணி​யிடங்​களும், ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக 19,260 ஆசிரியப் பணி​யிடங்​களும், மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக 3,041 பணி​யிடங்​களும், தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக 6,688 பணி​யிடங்​களும் நிரப்​பப்​படும்.


2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்​துக்​குள் மொத்​தம் 46,584 பணி​யிடங்​கள் மற்​றும் சமூக நலத்​துறை, நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை உள்​ளிட்ட முக்​கிய துறை​களில் காலி​யாக​வுள்ள 30,219 பணி​யிடங்​கள் என மொத்​தம் 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும்'என்று குறிப்​பிட்​டார். இந்​நிலை​யில், அரசு மற்​றும் பொதுத் துறை நிறு​வனங்​களுக்கு அவுட்​சோர்​சிங் முறை​யில் (வெளி​முகமை) ஆட்​களை நியமிக்​கும் பொறுப்பு சென்னை கிண்​டி​யில் உள்ள அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. அந்​நிறு​வனம் அவுட்​சோர்​சிங் பணிநியமன பணி​களுக்​கான முதல் கட்ட பணி​களை தொடங்​கி​யுள்​ளது. அரசு மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களுக்கு வெளி​முகமை (அவுட்​சோர்​சிங்) முறை​யில் பணி​யாளர்​களை தேர்வு செய்​யும் ஒப்​பந்​தப்​புள்​ளியை​யும் கோரி​யுள்​ளது.


இதுகுறித்து உயர​தி​காரி ஒரு​வர் கூறும்​போது, 'அரசுத் துறை​களில் ஏற்​படும் தற்​காலிக பணி​யிடங்​கள், குறிப்​பாக கணக்கு அலு​வலர், டேட்டா எண்ட்ரி ஆபரேட்​டர் போன்ற பணி​கள் அவுட்​சோர்​சிங் முறை​யில் வெளிநிறு​வனங்​கள் வாயி​லாக மேற்​கொள்​ளப்​படும். நிரந்தர பணி​யிடங்​கள் வழக்​கம்​போல தேர்​வாணை​யங்​கள் வாயி​லாகவே நிரப்​பப்​படும்' என்​றார்.


அவுட்​-சோர்​சிங் பணிநியமன முறை​யால் அரசுப் பணி​களுக்​கான நேரடிப் பணி​யிடங்​கள் பெரு​மளவு குறை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ள​தாக அரசு ஊழியர் சங்க நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். இதுகுறித்து தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றிய மாநிலத் தலை​வர் த.அமிர்​தகு​மார் கூறியதாவது: 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​யில், அரசுத் துறை​களில் அவுட்​சோர்​சிங் முறை முற்​றி​லும் ஒழிக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டது. இது​வரை அந்த வாக்​குறு​தியை நிறைவேற்​ற​வில்​லை. முதலில் ஆங்​காங்கே அவுட்​சோர்​சிங் முறை நியமனம் மேற்​கொள்​ளப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது பல துறை​களில், குறிப்​பாக சுகா​தா​ரத் துறை​யில் அதிக எண்​ணிக்​கை​யில் அவுட்​சோர்​சிங் முறை நியமனங்​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. அவுட்​சோர்​சிங் முறை நியமனத்​தால் அரசின் செலவு குறை​யும் என்று அரசு கருதலாம்.


ஆனால், நிரந்தர அரசு ஊழியர்​களாக இருந்​தால் அவர்​களுக்கு பொறுப்​புணர்வு உண்​டு. அதே​நேரத்​தில், அவுட்​சோர்​சிங் ஊழியர்​கள் பொறுப்​புணர்​வுடன் செயல்பட மாட்​டார்​கள். இதனால். அரசு நிர்​வாகத்​தில் முறை​கேடு​கள் நடை​பெறும். அவுட்​சோர்​சிங் முறை​யால் இளைஞர்​களின் அரசு வேலை கன​வும் தகர்ந்து போகும். எனவே, தமிழக அரசு அவுட்​சோர்​சிங் முறை நியமனத்​தை உடனடி​யாக கைவிட வேண்​டும்​ என்​றார்​. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments