மீனவர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: சென்னை கடலோர காவல் படை வீட்டுக்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரங்கள் இதோ..

Follow Us

மீனவர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: சென்னை கடலோர காவல் படை வீட்டுக்காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரங்கள் இதோ..

 மீனவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, சென்னை பெருநகர வீட்டுக்காவலர் (Greater Chennai Home Guards) பிரிவில் கடலோர வீட்டுக்காவலராக (Coastal Home Guards) பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

                                                                             


ஆர்வமும், கடல் நீச்சல் திறனும் கொண்ட இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணிக்கான தகுதிகள்: வயது: 01.08.2025 அன்று 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.


கூடுதல் தகுதி: குற்றப் பின்னணி இல்லாதவராகவும், நல்ல நடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும்.


கடல் நீச்சல்: கட்டாயமாக கடல் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.


வசிப்பிடம்: சென்னை மாநகரத்தை சேர்ந்தவராகவும், மெரினா மற்றும் மெரினா காவல் நிலைய கடற்கரையோர பகுதிகளில் 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.


இனத்தவர்: மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களாக இருக்க வேண்டும். (இதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் பெற வேண்டும்.)


ரேஷன் கார்டு: ஒரு செல்லுபடியாகும் ரேஷன் கார்டை கொண்டிருக்க வேண்டும்.


பயிற்சி மற்றும் பணி விவரங்கள்:


தேர்ந்தெடுக்கப்படும் வீட்டுக்காவலர்களுக்கு 45 நாட்களுக்கு ஒரு மணிநேர தினசரி பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு, கடலோர பாதுகாப்புப் பிரிவுக்கு உதவுவதற்காக அவர்கள் மெரினா, மெரினா கடல் காவல் நிலையம் மற்றும் சென்னை கடலோர பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணியில் இரவு மற்றும் பகல் ரோந்துப் பணிகள் இருக்கும். இந்த பணிக்காக ஒரு நாளைக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், இலவச விண்ணப்ப படிவத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ கீழ்க்கண்ட முகவரிக்கு சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 30.09.2025 அன்று மாலை 5 மணி ஆகும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


Greater Chennai Home Guards office,

J1-Saidapet police station complex,

Annasalai, Saidapet, Chennai-15.

Phone: 95667 76222, 94981 35373

Post a Comment

0 Comments