பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் (Bank of Maharashtra) அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Generalist Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 500
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.07.2025 அன்று 22 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 64820 - 2340/1 - 67160 - 2680/10 - 93960
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கணினி வழித் தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது/ வங்கி சார்ந்த 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/bomjul25/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 118
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
0 Comments