என்பிசிஐ (NPCI) என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் (PSPs) மட்டுமல்லாமல், அதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை (UPI Transactions) கொடுக்கும் ஒட்டுமொத்த பேங்குகளுக்கும் புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.
இந்த விதிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பின்பற்றப்பட இருக்கிறது. மொத்தமாக 10 விதிகள் அமலுக்கு வருகின்றன. இதில் பேங்குகள், பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள், யுபிஐ கஸ்டமர்கள் என்று விதிகள் இருக்கின்றன.
பேலன்ஸ் சரிபார்ப்பு (Balance Enquiry): யுபிஐ ஆப்கள் மூலம் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்ப்பு செய்ய முடியும். கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் இருந்தால், ஒவ்வொரு ஆப் மூலமாகவும் 50 முறை பேலன்ஸ் சரிபார்ப்பு செய்து கொள்ளலாம். பீக் நேரங்களில் சிரமத்தை குறைக்க இந்த விதி வருகிறது.
லிஸ்ட் கீஸ் (List Keys): இந்த விதியானது, கூகுள் பே, போன்பே போன்ற பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களுக்கு அமலாகிறது. ஆகவே, பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே லிஸ்ட் கீஸ்-ஐ இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திடம் இருந்து பெற்று கொள்ள முடியும். இதில் கஸ்டமர்களின் 1000 பக்க அளவிலான கோரிக்கைகள் இருக்கும்.
லிஸ்ட் அக்கவுண்ட் (List Account): இது யுபிஐ கஸ்டமர்களுக்கு அமலாகும் விதியாகும். ஒரு கஸ்டமர் ஒரு நாளுக்கு 25 முறை மட்டுமே அவருடைய மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்களின் லிஸ்டை பார்க்க முடியும். இந்த கோரிக்கைகள் கஸ்டமர்களால் மட்டுமே தொடங்கப்பட வேண்டும் என்பிசிஐ விதிகளில் இருக்கிறது.
பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சரிபார்த்தல் (Check Transaction Status): ஒரு பரிவர்த்தனை முடிந்த பிறகு அதை சரிபார்க்க வேண்டுமானால், 2 மணி நேரத்தில் 3 முறை மட்டும் செய்ய முடியும். இதில் ஒவ்வொரு சரிபார்த்தலுக்கும் இடையே 90 நொடிகள் இடைவெளி கொடுக்க வேண்டும். ஒரு பரிவர்த்தனை முடித்தவுடன் 45 முதல் 60 நொடிகளுக்கு பிறகு பார்க்கலாம்.
ஆட்டோபே மேன்டேட் நிறைவேற்றம் (Autopay Mandate Execution): இந்த ஆட்டோபே மேன்டேட் கஸ்டமர்களால் மட்டுமே தொடங்கப்பட வேண்டும். ஒரு மேன்டேட்டுக்கு அதிகபட்சம் 1 முயற்சி மற்றும் 3 மறுமுயற்சிகள் அனுமதிக்கப்படும். இதுபோன்ற மேன்டேட் நிறைவேற்றமானது, இனிமேல் நன்-பீக் ஹவர்களில் மட்டுமே நடக்க இருக்கிறது.
லிஸ்டு வெரிஃபைட் வணிகர்கள் (List Verified Merchants): இது பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களுக்கு அமலாகும் விதியாகும். வெரிஃபைட் செய்யப்பட்ட வணிகர்களின் பட்டியலை ஒரு நாளுக்கு ஒரு முறை பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் பெற்று கொள்ள முடியும். இதிலும் 1000 பக்க அளவிலான கோரிக்கைகள் இருக்க வேண்டும்.
பென்னி டிராப் (Penny Drop): இந்த விதியானது, யுபிஐ சேவையை கொடுக்கும் நிறுவனங்களில் ஒழுங்குமுறைத் தேவையிருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட இருக்கிறது. இதுவும் யுபிஐ கஸ்டமர்களின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே தொடங்கப்பட வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உத்தரவிட்டுள்ளது.
வேலிட்கஸ்டமர்கள் சரிபார்ப்பு (ValCust API): இது யுபிஐ கஸ்டமர்களின் விவரங்களை சரிபார்க்கும் அனுமதியை கொடுக்கிறது. யுபிஐ கஸ்டர்களின் விவரங்கள் கட்டாயம் சரிபார்ப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்போது, பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் இதை செய்து கொள்ளலாம். அதுவும் சரியான காரணம் இருக்க வேண்டும்.
ஏபிஐ ஹெட்டர் பார்மெட் (API Header format): இந்த விதிகள் பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களுக்கு வருகிறது. என்பிசிஐ-யிடம் குறிப்பிட்ட தலைப்புகளை மட்டுமே யுபிஐ ஆப்களில் அந்த நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். ஆகவே, அங்கீகரிக்கப்படாத தலைப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்படாது. ஆகவே, இது கஸ்டமர்களின் தேவைக்கு ஏற்ப இருக்கும்.
முகவரியை சரிபார்த்தல் (Validate Address): யுபிஐ ஐடிக்கள் (UPI IDs) அல்லது விர்ச்சுவல் பேமெண்ட் முகவரிகளை (Virtual Payment Addresses) ஆகியவற்றை சரிபார்ப்பதற்கு இந்த விதி அமல் செய்யப்பட இருக்கிறது. யுபிஐ கஸ்டமர்கள் பணம் செலுத்த விரும்பும் போது மட்டுமே இந்த முகவரி சரிபார்த்தை செய்ய வேண்டும். இந்த விதிகளே ஆகஸ்ட் 1ஆம் தேதி வருகிறது.
.jpeg)
0 Comments