தமிழக அரசின் TABCEDCO திட்டத்தில் ரூ.1.20 லட்சம் கடன் - கறவை மாடு வாங்க விருப்பமா? இங்கே முழு விவரம்!

Follow Us

தமிழக அரசின் TABCEDCO திட்டத்தில் ரூ.1.20 லட்சம் கடன் - கறவை மாடு வாங்க விருப்பமா? இங்கே முழு விவரம்!

 TABCEDCO துவக்கிய புதிய வாய்ப்பு - பால் பண்ணை தொடங்க கறவை மாடுகளுக்கு ரூ.1.20 லட்சம் கடன்!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) , பால் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இந்நூல்திட்டத்தின் கீழ் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 வரை கடன் பெறலாம்.


முக்கிய அம்சங்கள்:


திட்டம் வழங்குபவர்கள்: TABCEDCO, AAVIN / மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம்


கடன் தொகை: ஒரு மாடுக்கு ₹60,000, அதிகபட்சம் 2 மாடுகள் - ₹1,20,000 வரை


கடன் திருப்பிச் செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்


வட்டி விகிதம்: வருடத்திற்கு 7% (பயனாளி பங்கு 5% மட்டுமே)


தகுதி விவரங்கள்:


வயது வரம்பு: 18 முதல் 60 வயது வரை


வருமான வரம்பு: ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்


மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஆகியிருக்க வேண்டும்


ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்கே கடன் வழங்கப்படும்


தேவையான ஆவணங்கள்:


சாதி சான்றிதழ்


வருமானச் சான்றிதழ்


பிறப்பிடச் சான்றிதழ்


பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் சான்று


விண்ணப்பிக்கும் முறை:


பயனாளிகள் தங்கள் மாவட்ட ஆவின் சங்கத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்


சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

Post a Comment

0 Comments