சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் பகுப்பாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகவல் பகுப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து புள்ளியியல், கணிதவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் (பிசிஏ) ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியில் பணிசெய்ய தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக 42 வயது மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விவரங்கள் chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு உரிய படிவத்தில் புகைப்படம் மற்றும் சுய கையொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இணைத்து செய்தி வெளியீடு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் மாலை 5:45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு, எண்:1, புதுத்தெரு, ஜிசிசி வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூர், சென்னை - 600016. (ஆர்டிஓ அலுவலகம் அருகில்) என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதிளைக் கொண்டிராதவர்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் ஆகியன பரிசீலிக்கப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் கட்டாயமாக இருக்க வேண்டும்
0 Comments