Chengalpattu Village Assistant Recruitment 2025: செங்கல்பட்டு இளைஞர்களுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட்! 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை

Follow Us

Chengalpattu Village Assistant Recruitment 2025: செங்கல்பட்டு இளைஞர்களுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட்! 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை

 Chengalpattu Revenue Department Recruitment 2025: செங்கல்பட்டு மாவட்டம் வருவாய் அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.



கிராம உதவியாளர்


காலியிடங்கள்: 41

தாலுகா வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

செய்யூர் - 09

மதுராந்தகம் - 23

திருக்கழுக்குன்றம் - 01

தாம்பரம் - 02

வண்டலூர் - 06


சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.11,100 முதல் Rs.35,100 வரை ஊதியம் வழங்கப்படும்.



தகுதி:


10ம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:


பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் - 21 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி - 21 வயது நிரம்பியவராகவும் 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

இதர வகுப்பினர் - 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தை https://chengalpattu.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்



தேர்வு செய்யும் முறை:


மிதிவண்டி /இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்

நேர்முகத் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் படுவர்



முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025

எழுத்து தேர்வு தேதி: 05.09.2025

நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 to 26.09.2025

Post a Comment

0 Comments